பரபரப்பு மீண்டும் விமானம் மோதியது !!!

, , , 4 Comments »
ஐதராபாத்தில் நேற்று நடந்த கடற்படை சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற விமானம் ஒன்று விமானியின் கட்டுப்பாட்டை இழந்து அடுக்குமாடி குடியிருப்பு மீது மோதி நொறுங்கியது. இதில், 2 விமானிகள் பலியானார்கள். மேலும் அந்த கட்டிடத்தில் இருந்த 7 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த கட்டிடம் பலத்த சேதம் அடைந்தது.

ஐதராபாத் பேகம்பெட் பழைய விமான நிலையத்தில் இந்திய விமான கண்காட்சி நேற்று தொடங்கியது. இதில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் படேல், ஆந்திர முதல்வர் ரோசய்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடக்க விழாவின் ஒரு பகுதியாக கடற்படையினரின் விமான சாகச நிகழ்ச்சி நடந்தது. அதில் கடற்படையின் சாகர் பவன் குழுவினர் சாகசம் செய்தனர்.


வானில் பறந்த 4 கிரண் ரக விமானங்கள் குட்டிகரணம் அடித்து சாகசம் செய்தன. அப்போது, அதில் ஒரு விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கீழே பாய்ந்தது. சாகச நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.


விமானத்தை கட்டுப்படுத்த விமானியும், துணை விமானியும் செய்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. விமான நிலையத்தில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் உள்ள புது பவன்பள்ளி பகுதியில் இருக்கும் 3 மாடி குடியிருப்பின் 3வது மாடியில் இருந்த வீடு மீது அந்த விமானம் பயங்கர சத்தத்துடன் மோதி நொறுங்கியது. இதில் கட்டிடத்தில் கூரையில் இருந்த செல்போன் டவர் மற்றும் 3வது, 2வது மாடி இடிந்தன.


மோதிய வேகத்தில் விமானத்திலும், கட்டிடத்திலும் தீ பிடித்தது. அந்த கட்டிடத்தில் இருந்த கிளம்பிய கரும்புகை பல கி.மீ. தூரத்துக்கு தெரிந்தது. விமானம் மோதிய சிறிது நேரத்தில் தீயணைப்பு படையினர் அந்த இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர்.


அதே நேரத்தில் கட்டிடத்தில் இருந்தவர்களை மீட்கும் பணியும் தொடங்கியது. இடிபாடுகளில் சிக்கியும், தீக்காயம் அடைந்தும் தவித்துக் கொண்டிருந்த 7 பேரை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர். விமானி மவுரியா, துணை விமானி ராகுல் நாயர் ஆகியோரின் சடலங்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டன. விமானத்தின் சிறகு உடைந்து விழுந்ததில் ரோட்டில் நின்றிருந்த மாருதி வேன் நொறுங்கியது.


இது குறித்து விமானப்படை தலைமை தளபதி நிர்மல் வர்மா கூறுகையில்,ÔÔவிபத்துக்கான காரணம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விமானிகள் பாராசூட் உதவியுடன் குதித்து தப்பி இருக்கலாம். ஆனால், பொதுமக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படாமல் விமானத்தை தரைஇறக்க முயன்றதால் பாராசூட் உதவியுடன் குதிக்க அவர்களுக்கு கால அவகாசம் இல்லாமல் போய் இருக்கலாம்ÕÕ என்றார். இந்த விபத்தை தொடர்ந்து கிரண் ரக விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
 
THANKS DINAKARAN
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ....

4 Responses to "பரபரப்பு மீண்டும் விமானம் மோதியது !!!"

அண்ணாமலையான் Says :
March 4, 2010 at 12:09 AM

ஆமாங்க... பாவம் விமானிகள்..

ரிஷபன் Says :
March 4, 2010 at 2:32 AM

உயிருக்கு ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவது சரிதானா.. ?

விக்னேஷ்வரி Says :
March 4, 2010 at 3:49 AM

சோகமான தகவல்.

ஆமா, இதுக்கு எதுக்கு ட்வின் டவர் படம்?

சி. கருணாகரசு Says :
March 4, 2010 at 4:24 AM

விமானிகள் பாராசூட் உதவியுடன் குதித்து தப்பி இருக்கலாம். ஆனால், பொதுமக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படாமல் விமானத்தை தரைஇறக்க முயன்றதால் பாராசூட் உதவியுடன் குதிக்க அவர்களுக்கு கால அவகாசம் இல்லாமல் போய் இருக்கலாம்ÕÕ //

விமானிகளின் மரணத்துக்கு...எமது ஆழ்ந்த இரங்கல்.

Post a Comment