நித்யானந்தாவின் லீலைகள் நடிகைகள் பட்டியல் நீள்கிறது !!

, , 1 Comments »
பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்த சாமியார் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொதிப்படைந்த பக்தர்கள், பல நகரங்களிலும் உள்ள அவரது ஆசிரமங்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். பல இடங்களில் நித்யானந்தரின் உருவப் படங்களை செருப்பால் அடித்து கொளுத்தினர்.
திடீரென நித்யானந்தா தலைமறைவானது பரபரப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நித்யானந்தாவின் ஆசிரமங்களுக்கு பல நடிகைகள் வந்து சென்றுள்ளனர். பழம் பெரும் கதாநாயகியின் சகோதரி, அவரது மகள் ஆகியோரும் நடிகைகள். சகோதரி மகள் நடிகைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் நித்யானந்தாவை சந்தித்துள்ளார். அப்போது அவருடன் நடிகைக்கு தொடர்பு ஏற்பட்டது. நித்யானந்தாவுக்கு நடிகைகளுடன் தொடர்பு ஏற்பட இவர் முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. ஆசிரமத்துடன் தொடர்புடைய நடிகைகளின் பட்டியலில் சினிமாவிலிருந்து தற்போது ஒதுங்கியிருக்கும் நடிகைகள், நடித்து வருபவர்கள், திருமணமானவர்கள் என பலர் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவருமே நித்யானந்தாவுடன் நெருங்கி பழகியுள்ளனர். ஹீரோயினாக நடித்து பிறகு சீரியலில் நடித்தும், அங்கிருந்தும் காணாமல் போன யுவ நடிகை, சின்னப்பூவாய் மெல்லப்பேசும் நடிகை என பலருக்கு நித்யானந்தா ஆசிரமத்துடன் தொடர்பு உள்ளது. விஷயம் வெளியானதால் அந்த நடிகைகள் கலக்கத்தில் உள்ளனர்.


நிர்மலமான நடிகை


நித்யானந்தாவிடம் பல சினிமா நடிகைகள் தொடர்பு வைத்துள்ளனர். அவர்களில் ஒருவர் நடிகை ராகசுதா. இவர், தமிழில், ராமராஜன் ஜோடியாக ‘தங்கத்தின் தங்கம்’, நெப்போலியன் நடித்த ‘தமிழச்சி’, ‘தம்பி’, ‘அம்முவாகிய நான்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். நடிகை கே.ஆர்.விஜயாவின் தங்கை மகளான இவர், யோகா வகுப்புகளுக்கு சென்று வந்தார். சென்னையில் நித்யானந்தா நடத்திய யோகா வகுப்புக்கு சென்று வந்த அவர், நித்யானந்தாவை பார்த்த உடனேயே அவர் காலில் விழுந்து வணங்கினாராம். அதிலிருந்து, அவருடைய ஆசிமரத்தில் சேர்ந்து சன்னியாசி ஆனார். மைசூரிலுள்ள இவரது ஆசிரமத்தில், சுவாமி நிர்மலானந்தா என்ற பெயரில் சில வருடங்களாக யோகா கற்றுக்கொடுத்து வருகிறார் ராகசுதா. இவர்தான் சாமியாருக்கு பல நடிகைகளை அறிமுகப்படுத்தி வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் பல முன்னாள் நடிகைகள் மற்றும் டிவி நடிகைகளும் அடங்குவர் என்றும் விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

மோசடி புகார்கள் குவிகின்றன
ஆசிரமம் அமைந்துள்ள இடத்திற்கு வந்திருந்த அதே ஏரியாவைச் சேர்ந்த பாபு என்பவர் கூறும்போது, “நித்தியானந்தா பீடம் 2003ம் ஆண்¢டு வாக்கில் அமைக்கப்பட்டது. இதற்காக இப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் மிரட்டி, நிலங்கள் குறைந்த விலையில் வாங்கப்பட்டன. சில பகுதிகளில் அடுத்தவர் நிலங்களையும் ஆக்கிரமித்தனர்’’ என்றார்.

சந்தனக்கட்டை மீட்பு: நித்யானந்தாவின் ஆசிரமத்தில் நேற்று மதியம் வனத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். டி.சி.எப். ஆசிரமத்தில் சுமார் 60 முதல் 80 கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சாமியார் புலித்தோல் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதுகுறித்தும் வனத்துறை விசாரணை செய்து வருகிறது.


80 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஆசிரமத்தின் உள்ளே 8 முதல் 10 கட்டிடங்கள் உள்ளன. சில கட்டிடங்கள் வெளிநாட்டு பக்தர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதவிர தியானம் செய்வதற்கு குடிசை வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 3 குடிசைகள் நேற்று தீவைத்து கொளுத்தப்பட்டன. போராட்டக்காரர்கள் அதை கொளுத்தினார்களா? அல்லது ரகசிய ஆவணங்களை அழிக்கும் முயற்சியா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.நித்யானந்தா தலைமறைவு!

கொதிப்படைந்த பக்தர்கள், பல நகரங்களிலும் உள்ள அவரது ஆசிரமங்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். பல இடங்களில் நித்யானந்தரின் உருவப் படங்களை செருப்பால் அடித்து கொளுத்தினர். திடீரென நித்யானந்தா தலைமறைவானது பரபரப்பை அதிகரித்துள்ளது. பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் நித்யானந்த தியான பீடம் என்ற ஆசிரமம் நடத்தி வருபவர் பரமஹம்ச நித்யானந்தா (31). தமிழகத்தில் சென்னை, திருவண்ணாமலை உள்பட பல நகரங்களிலும் இவரது ஆசிரமங்கள் உள்ளன. உலகின் பல நகரங்களுக்கும் சென்று சொற்பொழிவுகள் ஆற்றி வந்தார். இந்நிலையில், பிரபல நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருக்கும் படுக்கை அறை வீடியோ காட்சிகள் நேற்று வெளியாயின. இது பெரும் பரபரப்பையும் பக்தர்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தை பொதுமக்கள் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் நேற்று இரவு முற்றுகையிட்டனர். ஆசிரமத்துக்கு உடனே சீல் வைக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். பதற்றம் அதிகரித்ததால், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சிவபாபு கைது செய்யப்பட்டார். ஆசிரமத்தில் தங்கியிருந்த 45 ஊழியர்கள் நேற்று நள்ளிரவு நித்யானந்தாவின் பேனர்கள், போஸ்டர்களை ஆவேசமாக கிழித்து எறிந்துவிட்டு வெளியேறினர். ஆசிரமத்தை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சொந்த ஊரான தி.மலையில் ஆசிரமம் அமைக்க நித்யானந்தா ஆசைப்பட்டார். இதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு பவழக்குன்று மலையை ஆக்கிரமிக்க முயன்றுள்ளார். அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், 2 ஆண்டுகளுக்கு முன்பு கிரிவலப்பாதையில் உள்ள நிருதிலிங்கம் அருகே 3 ஏக்கர் பரப்பில் ஆசிரமம் அமைத்தார். அங்கு அவர் தங்க சொகுசு அறையுடன் கட்டிடம் கட்டப்பட்டது. திருவண்ணாமலைக்கு வரும்போது அங்குதான் தங்குவார். கடந்த ஜனவரி 8&ம் தேதி பிறந்தநாள் விழாவை இங்கு விமரிசையாக கொண்டாடியுள்ளார்.

இதுதொடர்பாக தி.மலை மாவட்ட இந்து முன்னணி தலைவர் டி.எஸ்.சங்கர் கூறுகையில், ‘‘ஆடம்பர வாழ்க்கை வாழும் நித்யானந்தர் கிரிவலப்பாதையில் ஆசிரமம் கட்டக் கூடாது என்று ஏற்கனவே கூறினோம். அவரது சுயரூபம் தற்போது அம்பலமாகியுள்ளது. அவரை உடனே கைது செய்ய வேண்டும். தி.மலைக்குள் அவரை இனி விடமாட்டோம்’’ என்றார். புதுச்சேரி வில்லியனூர் ஏம்பலத்தில் உள்ள நித்யானந்தர் ஆசிரமத்தை பொதுமக்கள் சூறையாடினர். ஜன்னல்கள், விளக்குகள், மின்விசிறிகள் அடித்து நொறுக்கப்பட்டன. சாமியார் பேனரை தீவைத்து கொளுத்தி செருப்பால் அடித்தனர். பதற்றம் அதிகரித்ததால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி பஸ் ஸ்டாண்டில் இந்து முன்னணி அமைப்பினர் மாநில பொதுச்செயலாளர் முருகையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நித்யானந்தாவை கைது செய்து சொத்துக்களை முடக்க வேண்டும் என்று மக்கள் கோஷம் எழுப்பினர்.

கடலூர் வண்டிப்பாளையத்தில் உள்ள ஆசிரமத்தில் பேனர்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. கடலூர் மோகினிபாலம் பகுதியில் ஆசிரமத்தின் பெயர்பலகையை பொதுமக்கள் தார்பூசி அழித்தனர். நெல்லை டவுனில் உள்ள நித்யானந்தர் தியான மையத்தில் நித்யானந்தா படத்துடன் கூடிய டிஜிட்டல் பேனர், போஸ்டர்களை நிர்வாகிகளே கிழித்து எறிந்தனர். இந்த மையத்தில் சில மாதம் முன்பு அவர் ஆன்மீக உரையாற்றியுள்ளார். சீர்காழி சட்டநாதபுரம் மனோன்மணியம் நகரில் நித்யானந்த பீடத்தை அவர் சமீபத்தில் திறந்துவைத்தார். இங்கு தினமும் பஜனை, தியானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. டிவியில் ஆபாச காட்சிகளை பார்த்த மக்கள் ஆவேசமடைந்து நித்யானந்தா படங்கள், பேனர்களை நேற்று இரவு தீ வைத்து கொளுத்தினர்.

சென்னையில் 15க்கும் அதிகமான இடங்களில் அவரது சீடர்கள் ஆசிரம கிளை வைத்து தியான வகுப்புகள், ஆன்மீக நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை நடத்தி வந்துள்ளனர். நேற்று இரவோடு இரவாக அனைத்து இடங்களில் இருந்த போர்டுகள், பேனர்கள் அகற்றப்பட்டன. பல இடங்களில் ஆசிரம கிளைகள் பூட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், செக்ஸ் லீலை காட்சிகள் வெளியானதை தொடர்ந்து, நித்யானந்தா திடீரென தலைமறைவாகிவிட்டார். ஆசிரம நிர்வாகிகள் செல்போனில் அவரை தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை.

நித்தியானந்தா தலைமறைவாகிவிட்டார்:கமிஷ்னர்!

பரமஹம்ச நித்தியானந்தா சாமியார் பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாச லீலைகளில் ஈடுபட்டிருக்கும் வீடியோ வெளியானது. இதையடுத்து நாடெங்கிலும் நித்தியானந்தாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நேற்று சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ராம.சிவசங்கர், சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளித்தார். மேலும் பல வழக்கறிஞர்களூம் புகார் கொடுத்தனர். இந்நிலையில் இன்று சென்னை காவல்துறை ஆணையர், ’’வழகறிஞர்களின் புகாரை ஏற்று நித்தியானந்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’’என்று தெரிவித்தார். நித்தியானந்தா தலைமறைவாகிவிட்டார் என்பது உண்மை’’என்றும் தெரிவித்தார்.


THANKS VICETAMIL

1 Response to "நித்யானந்தாவின் லீலைகள் நடிகைகள் பட்டியல் நீள்கிறது !!"

juniorsamurai Says :
March 4, 2010 at 9:32 AM

palich padivu nandru

Post a Comment