NADUVIPPATTI -Kavignar Panithulishankar BBA,MBA,Ph'D - மதகுபட்டி , கட்டாணிபட்டி ,நடுவிப்பட்டி கவிஞர் பனித்துளி சங்கர்

, , , , 0 Comments »






இவளவு அறிவியல் வளர்ச்சி , இத்தனை நாகரிகப் புரட்சி , இத்தனை பொருளாதார வளர்ச்சி , இத்தனை கல்வி வளர்ச்சி என்று இன்று இந்தியா உலக நாடுகளுடன் போட்டிப்போட்டுக் கொண்டிருக்கும் இந்த சூழலில் இப்பொழுதெல்லாம் நமது ஊர்களிலும் என்ஜினீயர் , டாக்ட்டர் , ஆசிரியர் என்று தங்களின் குழந்தைகளும் வெளிநாடுகளில் சென்றேல்லாம் படிக்கிறார்களே அதில் ஒருவராவது நமது ஊரின் பெருமைகளை இந்த உலகிற்கு இதுபோன்ற இணையத்தின் வாயிலாக பரப்ப மாட்டார்களா என்று ஏங்கி வந்திருக்கும் அனைத்து அன்பின் உறவுகளுக்கும் வணக்கம் . இப்பொழுதெல்லாம் நாகரிகம் , பண வளர்ச்சி என்ற பெயரில் படிக்கிறேன் என்ற பெயரில் வெளியூர்களில் நேரத்தை வீணடித்து பணத்தை செலவழிப்பதிலும் , அம்மா அறிமுகம் செய்து வைத்த நமது சொந்த மண்ணை மறந்து து நாகரிகம் அறிவு வளர்ச்சி என்று போலியாய் வேடம் இட்டு நகரங்களில் குடிபுகும் அதி நாகரிகம் மட்டுமே இன்று வரை நமது கிராமங்களை ஆக்கிரமித்து இருக்கிறது என்று ஆணித்தரமாகக் கூறலாம் . இதை நான் இங்கு மிகவும் வருத்ததுடன் குறிப்பிடுவதற்கும் முக்கியக் காரணம் உண்டு . நானும் இதே மயில்றாயன் கோட்டை நாடு நடுவிப்பட்டியில் வசிக்கும் பரமசிவம் மற்றும் பழனியம்மாள் அவர்களின் முத்த மகன் பெயர் பனித்துளி சங்கர் என்னை உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும் என்று எண்ணுகிறேன் . . நான் தற்சமயம் துபாயில் பணிபுரிகிறேன் . நான் ஒரு எழுத்தாளன் நானும் கடந்து ஒன்பது வருடங்களாக பல செய்தித் தாள்கள் மற்றும் பல இணைய தளங்கள் மற்றும் வாரப் பத்திரிக்கைகளிலும் மற்றும் தனிப்பட்ட முறையில் எனது சொந்த இணையதளத்திலும் எழுதி வருகிறேன் . அப்பொழுதெல்லாம் கல்வி அறிவே இல்லாத எத்தனையோ குக்கிராமங்களில் இருந்து படிப்படியாய் முன்னேறிய எத்தனையோ மாணவர்கள் தங்களின் கிராமங்களைப் பற்றி ஆயிரக்கணக்கான குறிப்புகளை பகிர்ர்ந்து இருப்பது கண்டு வியந்தேன் . அதே சமயம் பணத்தாலும் பகட்டு வாழ்க்கை முறையினாலும் இவளவு வேகமாய் முன்னேறும் நமது ஊரிலிருந்தும் படித்த மாணவர்கள் இப்படி செய்திருக்க மாட்டார்களா !?, நமது ஊரும் ஏதேனும் ஒரு இடத்தில் அதன் பெயரும் இடம்பிடித்து விடாதா என்று தேடியபொழுது மிகவும் வெட்கப்படும் செய்திகள் அறிந்தேன் சாராயம் கடத்தல் , கட்டப்பஞ்சாயத்து , நகைப்பரிப்பு , ஆள் கடத்தல் என்று முகம் சுளிக்கும் செய்திகள் மட்டும் நன்கே நான்கு இடங்களில் வெளி வந்திருந்தது அதுவும் பெயர் ஊர் கூட சரியாக இல்லாமல் பல எழுத்துப் பிழைகளுடன் ! சிவகங்கை மாவட்டத்தில் நமது கிராமம்தான் தேர்த்தலில் கூட முதல் வாக்கு சாவடி என்பதை நாம் நன்றாக அறிவோம் . அந்தப் பட்டியலில் கூட நமது கிராமங்களின் பெயரை ஒருமணி நேர தேடலுக்குப் பிறகுதான் கண்டுபிடிக்க இயல்கிறது என்றால் எளவு வேதனையான விஷயம் . மாடி வீடுகள் கட்டுவதிலும் அதிகம் பணம் சேர்த்து பகட்டு வாழ்க்கை வாழ்வதிலும் பெருமை என்று மார்தட்டிக் கொள்ளும் செல்வா சீமான்களே . வருங்காலத்தில் இந்தியாவின் போலியான கல்வி , சுயசிந்தனை இல்லாத கிராமங்களின் பட்டியலில் நமது ஊர்களும் வரவேண்டுமா ??????? பணமும் போலியான வாழ்க்கை முறைகளும்தான் நமது சமுதாயத்தின் வருங்கால நினைவு சின்னங்களா ! ?????? , படிக்கிறேன் என்ற பெயரில் மதுபானங்கள் அருந்தி தினம் ஒரு பிரச்சனைகளுடன் இரவில் கண் மூடுவதுதான் நமது சாதனையா !? எத்தனை என்ஜினீயர்கள் நமது ஊரில் இப்பொழுது !? எத்தனை கம்பியூட்டர் என்ஜினீயர்கள் , எத்தனை டீச்சர்கள் என்று தமிழ் நாட்டில் ஏன் இந்தியாவில் உயர்ந்த ஒவ்வொரு துறைகளிலும் 
அதிகம் படித்தவர்கள் , படித்துகொண்டிருப்பவர்கள் என்று எண்ணத் தொடங்கினால் சிவகங்கை மாவட்டத்திலே நமது மயில்றாயன் கோட்டை நாடுதான் முதல் இடம் பிடிக்கும் .உலகத்தில் பணத்தாலும் பதவியினாலும் விலைகொடுத்து வாங்க இயலாத பல விஷயங்கள் உண்டு அதில் சிறந்தக் கல்வியும் உண்டு நமது ஊர்களை பொறுத்தவரையில் இப்பொழுதைய நிலைகளில் எந்த பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளுக்கு சிறந்தக் கல்வியை ஏற்படுத்திக் கொடுக்காமல் இல்லை ஆனால் அவர்களின் குழந்தைகள் அந்தக் கிடைத்தக் கல்வியை முறையாக பயன்படுத்தாதற்குக் காரணம் நமதுக் கிராமங்களின் அதிவேக வளர்ச்சி என்பதை மற்றும் உறுதியாக சொல்ல இயலும் . என்னைப் பொறுத்தவரையில் தற்போதையக் கல்வி முறை பெயருக்குப்பின்னால் படித்தவன் என்று சொல்லிகொல்வதற்கும் , திருவிழா மற்றும் கல்யாண விழாக்களில் வால் போஷ்ட்டர்களில் போட்டுகொல்வதற்கும் மட்டும் பயன்பட்டுவிடுமோ என்ற ஆதங்கம்தான் . அன்பின் உறவுகளே உங்களின் அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் ஒவ்வொரு மனிதனுக்கும் முகவரி எப்படி முக்கியமோ அதுபோல் ஒவ்வொரு ஊரிற்கும் அதன் சிறப்புகள் முகவும் அவசியம் அதுதான் நாம் நமது வருங்கால சந்ததிகளுக்கு விட்டு செல்லும் மிகப்ப பெரிய பொக்கிஷம் என்று சொல்லலாம் . இல்லையென்றால் காலப்போக்கில் இன்றைய இலங்கை தமிழர்களைப்போல நாமும் நமது வாழிடங்களை விட்டு அடித்து விரட்டப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை . சரி நண்பர்களே இனி நான் விஷயத்திற்கு வருகிறேன் வெகு நாட்களாக எனக்கும் நமது ஊரைப் பற்றி அதிகமான விபரங்களை சேகரித்து பின் வரும் தலை முறைகளும் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் உலகெங்கிலும் அறியும் விதமாக இணையத்தில் இணைக்க ஆசைப்பட்டேன் . அதற்க்கான வேலைகளிலும் தற்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன் எனது ஆறாவது புத்தகமாக நமது கிரங்களின் பலமைகளைப் பற்றி மயில்றாயன் கோட்டை என்றத் தலைப்பில் தற்போது ஒரு புதிய புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறேன் . உங்களில் யாருக்கேனும் நமது கிராமங்களின் சிறப்புகள் பற்றி ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் பிகன் வரும் முகவரியில் என்னை தொடர்புகொண்டு தெரியப்படுத்தவும் வெளி;வரும் புத்தகத்தில் தகவலுக்காக உங்களின் பெயர்களும் வெளியிடப்படும் . நமது கிராமங்களைப் பற்றி நாம் எழுதாவிட்டால் பின்பு யார் எழுதுவது .!?
வாருங்கள் ஒன்றாக வடம் பிடிப்போம் வரலாற்றில் இடம்பிடிப்போம் என்று குறி விடைபெறுகிறேன் நன்றி !

என்று அன்புடன் ,

கவிஞர் பனித்துளிசங்கர் BBA,MBA,Ph'D
நடுவிப்பட்டி 
தற்சமயம் ( துபாய் )
ஈ மெயில் முகவரி : shankarp071@gmail.com
எனது இணையதள முகவரி : www.panithulishankar.com/
எனது தொலைபேசி எண் : 0097155 9863654


0 Responses to "NADUVIPPATTI -Kavignar Panithulishankar BBA,MBA,Ph'D - மதகுபட்டி , கட்டாணிபட்டி ,நடுவிப்பட்டி கவிஞர் பனித்துளி சங்கர்"

Post a Comment